பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஹீரோவாக களமிறங்கும் நடிகர் மயில்சாமியின் மகன்..!!

 
1

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் மயில்சாமி. இந்நிலையில் திரையுலகை தனது அசாத்திய நகைச்சுவையால் கலக்கி வந்த நடிகர் மயில்சாமி கடந்த பிப்ரவரி மாதம், திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

மயில்சாமியின் மறைவு அவரது குடுமபத்தினர் மட்டுமின்றி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நடிகர் மயில்சாமிக்கு அன்பு, யுவன் என இரு மகன்கள் உள்ளனர். அவர்கள் இருவருமே திரையுலகில் நல்ல நடிகர்களாக ஆகா வேண்டும் என தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் மயில்சாமியின் மூத்த மகன் இதுவரை நான்கு படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள நிலையில் துரதிஷ்டவசமாக அந்த நன்கு படங்களும் நெடு நீண்ட நாட்களாக திரைக்கு வராமலே இருக்கிறது.

இந்நிலையில் சின்னத்திரை ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்பில் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாக உள்ள தங்கமகன் என்ற புதிய சீரியலில் ஹீரோவாக நடிக்க உள்ளார். இவருக்கு ஜோடியாக நம்ம வீட்டுப் பொண்ணு சீரியல் கதாநாயகி அஸ்வினி ஜோடியாக நடிக்க உள்ளார்.

வெள்ளித்திரையில் ஜொலிக்க சில காலம் ஆனாலும் தற்போது சின்னத்திரையில் நாயகனாக களமிறங்கி உள்ள அன்பு வெற்றிநடை போட வேண்டும் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

From Around the web