மன்னிப்புக் கேட்ட பிரபல நடிகர் நானா படேகர்..!

 
1

செல்ஃபி எடுக்க வந்த ரசிகரை தாக்கியது குறித்து நடிகர் நானா படேகர் வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் ரசிகர் ஒருவரை அடிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது நான் நடிக்கும் படத்தில் வரும் ஒரு காட்சி.

நாங்கள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தோம். முதல் ஒத்திகை காட்சி சரியாக வரவில்லை என்பதால் இரண்டாவது ஒத்திகைக் காட்சிக்கு தயாரானோம். அப்போது எதிர்பாராத விதமாக நீங்கள் வீடியோவில் பார்த்த அந்த இளைஞர் உள்ளே வந்துவிட்டார். நான் ரிகர்செல் என நினைத்து சம்பந்தப்பட்ட காட்சியின்படியே நான் அந்த இளைஞரை அடித்து அனுப்பினேன். அவர் படக்குழுவைச் சேர்ந்தவர் என்று எண்ணி தான் அப்படிச் செய்தேன். மற்றபடி அவர் யார் என்றே எனக்குத் தெரியாது. ஒத்திகை முடிந்த பின்தான், அவர் எங்கள் படக்குழுவைச் சேர்ந்தவன் இல்லை என்பது எனக்குத் தெரியவந்தது.

உடனே நான், அவரை அழைக்க முயன்றபோது, அவர் அங்கிருந்து ஓடிவிட்டார். வீடியோ எடுத்தது அவரது நண்பராக இருக்கலாம் என நினைக்கிறேன். நான் யாரிடமும் புகைப்படங்களை எடுக்க வேண்டாம் என கூறியதில்லை. அப்படி சொல்லவும் மாட்டேன். இது தவறுதலாக நடந்த விஷயம். தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். நான் இனி இப்படி செய்யமாட்டேன்” என உருக்கமாக வருத்தம் தெரிவித்துள்ளார். 


 


 

From Around the web