லியோ படமும் LCU தான்: உறுதி செய்த விக்ரமின் ஏஜெண்டு..!!

விக்ரம் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படம் லியோ. விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் த்ரிஷா, அர்ஜுன், மிஷ்கின், ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான், பிக்பாஸ் ஜனனி, பாபு ஆண்டனி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. அதையடுத்து காஷ்மீரில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் படப்பிடிப்புகள் பணி முடிவடைந்தது, சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு துவங்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.
ஏற்கனவே லியோ திரைப்படத்தின் கதை லோகேஷ் கனகராஜ் சினிமேட்டிக் யூனிவெர்ஸுக்குள்-வருவதாக தகவல்கள் கூறப்பட்டு வருகின்றன. இதன்மூலம் கைதி, விக்ரம் உள்ளிட்ட கதைகளின் இடைசெருகல்கள் மற்றும் அப்படத்தின் கதாபாத்திரங்கள் லியோ படத்திலும் ஆங்காங்கே வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Reached Kashmir 😍 For #Leo .. LCU Welcomes Thalapathy @Actorvijay 🔥 pic.twitter.com/GUqBiapwjK
— Narain (@thisisnarain__) March 15, 2023
ஆனால் இதை இதுவரை படக்குழு உறுதி செய்யாமல் தான் உள்ளன. இந்நிலையில் கைதி மற்றும் விக்ரம் படத்தில் ஏஜெண்டு பிஜாய் கதாபாத்திரத்தில் நடித்த நரேன் ‘லியோ’ படத்தில் இணைந்துள்ளார். அவர் தொடர்பான காட்சிகள் தற்போது காஷ்மீரில் படமாக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் லியோ படமும் LCU-க்கள் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது
மேலும் தான் லியோ படத்தில் இணைந்து நடித்து வருவதை நரேனும் தனது ட்வீட்டில் உறுதி செய்துள்ளார். லியோ படத்தில் நடித்து வருகிறேன் என்று கேப்ஷனில் பதிவு செய்துள்ளார். கைதி மற்றும் விக்ரம் படங்களில் ஏஜெண்டு பிஜோய் என்கிற கதாபாத்திரத்தில் நரேன் நடித்திருந்தார். இவர் தான் இரண்டு படங்களுக்குமான இணைப்பு பாலமாக இருந்தார்.
With @Dir_Lokesh. Shoot 🔥 #Leo pic.twitter.com/og0l9P7uW5
— Narain (@thisisnarain__) March 16, 2023
தற்போது அவர் ‘லியோ’ படத்தில் இணைந்துள்ளதால் விக்ரம் மற்றும் கைதியின் திரைக்கதை அம்சங்கள் ‘லியோ’விலும் இருக்கும் என்பது தெரியவந்துள்ளது. மீண்டும் சென்னையில் துவங்கும் படப்பிடிப்பிலும் நரேன் பங்கெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.