பிரபல நடிகர் ஓபன் டாக் : அஜித் படத்தில மட்டுமில்லை நிஜத்திலையும் ஹீரோ தான்...!

 
1

நடிகர் அஜித் சினிமாவில் மட்டுமல்லாமல் பல துறைகளிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததொன்று.

இந்நிலையில், சமீபத்திய ஒரு பத்திரிகை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் மாதவன், தன்னுடன் இணைந்து நடிக்கும் அஜித் பற்றி பேசிய வார்த்தைகள் இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகின்றது. அதன் போது, நடுவர் ஒருவர் அஜித் பற்றிக் கேட்ட கேள்விக்கு மாதவன் சிறப்பாக பதிலளித்துள்ளார்.

மாதவன் அதன்போது , “அஜித் திடீர் திடீரென்று ஒவ்வொன்றையும் செய்வார். ஒருக்கா ரேஸிற்குப் போவார்... ஒருக்கா நடிப்பார்... இப்படி பல திறமை இருக்கு அவருக்கு!” எனக் கூறியுள்ளார். இதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் சந்தோசப்பட்டுக் கொண்டனர்.

மேலும் அஜித் எல்லா விடயமும் தெரிந்து வச்சிருக்கின்றார் என்றதுடன் “அவர் சினிமால மட்டும் ஹீரோ இல்லை நிஜத்திலையும் ஹீரோ தான்" எனத் தெரிவித்துள்ளார். இவ்வாறு மாதவன் நடிகர் அஜித்தைப் பாராட்டியுள்ள தகவல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

From Around the web