நண்பர்களை நம்பி உயிரை விட்ட நடிகர் பாண்டியன்.. கொடூர மரணத்தின் பின்னணி!

 
1

 தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் ஹீரோவாக வலம் வந்த பாண்டியன் ஒரு கட்டத்தில் மார்க்கெட்டை இழந்த பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். மேலும், ரஜினிகாந்த்துடன், குரு சிஷ்யன் படத்தில் அவரது தம்பியாக நடித்தார்.

அவர் நடித்த ஆண் பாவம் திரைப்படம் பெரும் புகழ் பெற்றது. இதையடுத்து பல படங்களில் அவர் நாயகனாக நடித்தார். 80ஸ் படங்கள் வரை பாண்டியன் நடித்துள்ளார். சினிமாவில் நல்லபடியாக இருந்த பாண்டியன் அரசியல் ஆசையால் அரசியலில் ஈடுபட்டு பிரபல கட்சி ஒன்றுக்கு பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அங்குதான் சனி சண்டை போட ஆரம்பித்துள்ளது. அரசியல் வட்டாரங்களில் சில நண்பர் பழக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்களுடன் குடியும் கூத்துமாக இருந்து வந்துள்ளார்.

பின்னர், தனது நண்பர்களுக்கு தன்னுடைய மொத்த சொத்தையும் விற்று உதவி செய்து கொடுத்துள்ளார். இப்படி நண்பர்களையே உயிராக எண்ணி வாழ்ந்து வந்த பாண்டியராஜனுக்கு கடைசியில் கை செலவுக்கு கூட காசு இல்லாமல் நண்பர்களிடம் உதவிக்கேட்டுள்ளார்.

ஆனால், அவரை ஒரு மனுஷனாக கூட அவர்கள் மதிக்கவில்லையாம். இதனால், அதிகமாக குடித்து அவரது கல்லீரலும் பாதிக்ப்பட்டது. இதனால், சிகிச்சை பெற்ற அவர் உடல் நலக்குறைவால் 2008ம் ஆண்டிலேயே உயிரிழந்தார். இப்படி நண்பர்களால் ஏமாந்து குடித்தே உயிரிழந்த சம்பவம் இன்று வரை மக்களால் பேசப்பட்டு வருகிறது.

From Around the web