கைக்குழந்தையுடன் திருப்பதியில் நடிகர் பிரபுதேவா சாமி தரிசனம்..!

பின்னர் இவர்களது திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட 2011ம் ஆண்டு அவர்களது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. அப்போது சலசலப்பாக பேசப்பட்ட நடிகை நயன்தாரா பிரபுதேவா காதலும் திருமணம் வரைக்கும் போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுவும் பாதியிலேயே நின்றது.
இதையடுத்து, கடந்த 3 வருடங்களுக்கு முன்பு பிரபுதேவா, ஹிமானி சிங் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். ஆரம்பத்தில் அவரது திருமணம் ரகசியமாக இருந்த நிலையில், பிரபுதேவாவின் மூத்த சகோதரர் ராஜு சுந்தரம் இதை உறுதி செய்தார். பின்னர் 2 வருடங்களாக அவரை பெரிதாக வெளியுலகிற்கு அழைத்து வருவதை தவிர்த்து வந்ததார்.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் மனைவி ஹிமானி சிங்குடன் திருப்பதி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார். இந்நிலையில், ஹிமானி சிங் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்து இருக்கிறார். இதைத் தொடர்ந்து பிரபுதேவா மீண்டும் தந்தையானார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்நிலையில், பிரபுதேவா நேற்று திருப்பதி ஏழுமலையானை விஐபி பிரேக் தரிசனம் மூலம் வழிபட்டார். சாமி கும்பிடுவதற்காக இரவு தன்னுடைய 2வது மனைவி ஹிமானி சிங்க், ஒரு மாதத்திற்கு முன் பிறந்த மகள் ஆகியோருடன் பிரபுதேவா திருப்பதி மலைக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.
அதனை தொடர்ந்து நேற்று காலை கோவிலுக்கு சென்ற அவர்கள் ஏழுமலையானை விஐபி பிரேக் தரிசனம் மூலம் வழிபட்டனர். சாமி கும்பிட்ட பின் அவர்கள் கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை பெற்று கொண்டனர்.