பிரம்மாண்டமாக நடந்த நடிகர் பிரபுவின் மகள் திருமணம் : இயக்குனர் ஆத்விக் ரவிசந்திரனை மணந்தார்..!

 
1

நடிகர் சிவாஜி கணேசன் மற்றும் கமலா தம்பதியினரின் மூன்றாவது மகன் தான் பிரபு. நடிகர் பிரபுக்கு விக்ரம் பிரபு என்ற மகனும், ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர். இதில் விக்ரம் பிரபு கும்கி படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.

நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யா மெல்ட்ஸ் டெசர்ட் (meltz.dessertz) என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். 

இதையடுத்து, ஐஸ்வர்யாவும், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் சில காலமாக நெருங்கிய நண்பர்களாக பழகி வந்துள்ளனர். அந்த நட்பு காதலாக மாறியதை அடுத்து இருவீட்டாரின் சம்மதத்துடன் நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு நடிகர், நடிகைகள், திரைப் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதில் திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர். நடிகர் விஷால், இயக்குநர் மணிரத்னம், சுஹாசினி, துல்கர் சல்மான், லெஜண்ட் சரவணன், சுந்தர்.சி, குஷ்பூ உள்ளிட்ட ஏராளமானோர் வருகை தந்த இந்நிகழ்வில் நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

From Around the web