நடிகர் பிரதீப் கே. விஜயன் திடீர் மரணம்... ரசிகர்கள் அதிர்ச்சி!

 
1

’தெகிடி’, ‘வட்டம்’, ‘டெடி’, ‘லிஃப்ட்’ உள்ளிட்டப் படங்களில் நடித்தவர் நடிகர் பிரதீப் கே விஜயன். இவரது நகைச்சுவை கலந்த நடிப்பும், உருவமும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒன்று. இப்போது அவர் திடீரென மறைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் அவர் தனது இல்லத்தில் இருந்தபோது, இரண்டு நாட்களாக வெளியே வரவில்லை என்றும் நண்பர்கள் அவரை தொடர்பு கொள்ள முயன்ற போதும் அது தோல்வியிலேயே முடிந்திருக்கிறது. 

இதனால், காவல்துறை உதவியோடு அவரை போன் மூலம்  முயற்சி செய்து கொண்டே இருந்தார்கள். ஆனால் அவரது போனில் பதில் இல்லை. இறுதியாக அவர்கள் காவல்துறையினரின் உதவியை நாடி,போலீசாரை அழைத்துக் கொண்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, வீட்டினுள்ளே அவர் இறந்து கிடந்துள்ளார். மாரடைப்பு காரணமாக நடிகர் பிரதீப் கே விஜயன் உயிரிழந்திருக்கலாம் என்று கணிக்கிறார்கள். ஆனால் அவருக்கு என்ன நோய் என்று சரியாக  தெரியவில்லை.

From Around the web