மறைமுகமாக பிரதமர் மோடியை சாடிய நடிகர் பிரகாஷ் ராஜ்..! வைரலாகும் ட்வீட்..!
சமூக ஆர்வலரும் நடிகருமான பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் தல பக்கத்தில் கருத்தொன்றை பதிவிட்டுள்ளார். அதில் பிரதமர் மோடியை மறைமுகமாக சாடியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், இப்போது தனித்து நடக்க முடியாது. அவருக்கு யாராவது உதவி செய்தால் மட்டுமே நடக்க முடியும். I.N.D.I.A கூட்டணிக்கும் அவர்களுக்கு வாக்களித்த பொறுப்பான நாட்டு மக்களுக்கும் நன்றி. அவரது ஈகோவை (பிரதமர் மோடியின்) உடைத்து அவரது இடத்தை வெளிச்சம் போட்டு காட்டியதற்காக நன்றி. இந்தியாவுக்காக நாங்கள் எப்போதும் போராடுவோம். இந்தியாவுக்காக உடன் இருப்போம் எனப் பதிவிட்டுள்ளார் பிரகாஷ் ராஜ். தற்போது இவரது இந்த பதிவு வேகமாக வைரலாகி வருகின்றது.
The EMPEROR IS NAKED… he is forced to walk with someone else’s support now … 😂😂😂. … Thank you INDIA and the responsible Civil Society … for puncturing his Ego and for showing his place.. We fought well for our Country … and We shall continue to…💪💪💪 #JaiHind… https://t.co/RnRzxl7oti
— Prakash Raj (@prakashraaj) June 4, 2024