நடிகர் ரகுமானின் தாயார் மரணம்..!

 
ரகுமானின் தாயார் சாவித்ரி

நடிகரும், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் உறவினருமான ரகுமானின் தாயார் உடல்நலக்குறைவால் பெங்களூருவில் உள்ள இல்லத்தில் காலமானார்.

மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் 80-களில் காலக்கட்டத்தில் நடித்து புகழடைந்தவர் ரகுமான். குணச்சித்திர கதாபாத்திரங்கள், ஹீரோ என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.

கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘புது புது அர்த்தங்கள்’ படம் இவரை தேசியளவில் பிரபலமாக்கியது. சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்த ரகுமான், கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு திரும்பினார்.

அந்த படம் ஹிட்டானதை தொடர்ந்து தற்போது பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்திலும் அவர் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
 

From Around the web