இமயமலையில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படம் வெளியானது ..! 

 
1

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வேட்டையன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை டிஜே ஞானவேல் இயக்க லைக்கா நிறுவனம் இதனை தயாரித்துள்ளது.இந்த படமானது 2024 அக்டோபர் மாதத்தில் வெளியாக இருக்கிறது. அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் கூலி திரைப்படத்தில் நடிக்க உள்ளார் ரஜினி. இதற்கிடையில் வேட்டையன் படப்பிடிப்பை முடித்த ரஜினி, தனது ஓய்வு நேரத்தை செலவிட கடந்த சில தினங்களுக்கு முன்பாக அபுதாபிக்கு சென்றார். அங்கு லூலு குழும தலைவருடன் காரில் பயணம் சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது.அதன் பின்னர் கடந்த மே 29ஆம் தேதி சென்னையிலிருந்து இமயமலை புறப்பட்டார். நடிகர் ரஜினி ஒவ்வொரு ஆண்டும் இமயமலைக்கு செல்வது வழக்கம். அங்கு கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்களில் சாமி தரிசனம் செய்வதும் வழக்கம்.

எனவே இந்த முறையும் நடிகர் ரஜினி பாபாஜி குகை, பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களுக்கு செல்கிறார். அங்கு அவர் சாமி தரிசனம் செய்யும் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. சென்றுள்ளார். அங்கு வந்த பக்தர்களும் ரஜினியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

நடிகர் ரஜினி கடந்த ஆண்டும் இதேபோல் ஜெயிலர் படத்தை முடித்துவிட்டு இமயமலைக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

From Around the web