நடிகர் ரஜினி மகள் சவுந்தர்யா ரூ. 1 கோடி நிதியுதவி..!

 
நடிகர் ரஜினி மகள் சவுந்தர்யா ரூ. 1 கோடி நிதியுதவி..!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வேண்டுகோளுக்கு இணங்க நடிகர் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ. 1 கோடி நிதியுதவி செய்தார்.

நாடெங்கிலும் கொரோனா இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்து பதிவாகி வருகிறது. இறப்போரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


கொரோனா பாதிப்புகளை தடுக்கும் நோக்கில் அனைவரும் நிவாரண நிதி வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். அதை தொடர்ந்து பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், விளையாட்டுத் துறை பிரபலங்கள், திரை பிரபலங்கள் என பலரும் நிதி வழங்கி வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 1 கோடி நிதி வழங்கியுள்ளார். தலைமைச் செயலகத்திற்கு கணவர் விசாகன் மற்றும் மாமனார் எஸ்.எஸ். வணங்காமுடியுடன் வந்த சவுந்தர்யா முதல்வரை நேரில் சந்தித்து நிதியுதவிக்கான காசோலையை வழங்கினார்.

From Around the web