விபத்தில் சிக்கிய நடிகர் ரவிச்சந்திரன் மகன் ஹம்சவர்தன்..!

 
1

புன்னகை தேசம், ஜூனியர் சீனியர், மந்திரன் போன்ற படங்களில் நடித்துள்ளவர் தான் மறைந்த பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் மகன் ஹம்சவர்தன்.

இவர் நாயகனாக நடிக்கும் 'மகேஸ்வரா' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெற்றது.

மோகன் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஹரா' படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி இயக்குகிறார். படத்தில் உயர்ரக சொகுசு பென்ஸ் கார் ஒன்றை நொறுக்கி தரைமட்டமாக்கும் சண்டைக் காட்சி, அரியலூர் நெடுஞ்சாலையில் ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் சுப்பராயன் தலைமையில் படமாக்கப்பட்டது.

அப்போது எதிர்பாராத வகையில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சிறு காயங்களுடன் ஹம்சவர்தன் உள்ளிட்டோர் தப்பியுள்ளனர்.

From Around the web