20 ஆண்டுகளுக்கு பிறகு சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகர்..!! 

 
1

நடிகர் திலகம் சிவாஜியின் பேரன் துஷ்யந்த். இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு ‘சக்சஸ்‘ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு ‘மச்சி‘ என்ற படத்தில் நடித்தார். இவருக்கு சரியான வரவேற்பு கிடைக்காமல் போகவே நடிப்பில் இருந்து விலகி சிவாஜி புரொடக்ஷன் நிறுவனத்தையும், வேறு சில தொழில் நிறுவனங்களையும் நடத்தி வந்தார். ஈஷான் புரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி ‘மீன் குழம்பும் மண்பானையும், ஜெகஜாலகில்லாடி‘ படங்களை தயாரித்தார். ஆனால் இந்த படங்களும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில் துஷ்யந்த் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். சத்யராஜ், அஜ்மல் நடிக்கும் ‘தீர்க்கதரிசி‘ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். ஸ்ரீ சரவணா பிலிம்ஸ் சார்பில் பி.சதீஷ் குமார் படத்தை தயாரித்துள்ளார். மோகன், சுந்தரபாண்டியன் ஆகியோர் இயக்கியுள்ளனர். இப்படத்தின் அறிமுக விழா நடந்த போது இதில் துஷ்யந்தனும், அவரது தந்தை ராம்குமாரும் ஒன்றாக கலந்து கொண்டு தயாரிப்பாளருக்கும், இயக்குனர்களுக்கும் நன்றி தெரிவித்து பேசினார்கள்.

From Around the web