பெண் குழந்தைக்கு தந்தையான நடிகர் ஆர்.கே. சுரேஷ்- குவியும் வாழ்த்துகள்..!

 
பெண் குழந்தைக்கு தந்தையான நடிகர் ஆர்.கே. சுரேஷ்- குவியும் வாழ்த்துகள்..!

நடிகர் ஆர்.கே. சுரேஷ் மற்றும் மது தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்ததுள்ளது. இதுதொடர்பான தகவலை ஆர்.கே. சுரேஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழில் பல படங்களை தயாரித்துள்ள ஆர்.கே. சுரேஷ் பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரை தப்பட்டை’ படத்தில் நடிகராக அறிமுகமானார். மிகவும் மிரட்டலான வில்லனாக அந்த படத்தில் நடித்த அவர், தொடர்ந்து தமிழில் பல்வேறு படங்களில் வில்லனாக நடித்தார்.

அதே சமயத்தில் வன்முறை, வேட்டை நாய் போன்ற படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இதற்கிடையில் பல்வேறு மலையாளப் படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து படங்களை தயாரிப்பது விநியோக உரிமையை பெறுவது உள்ளிட்ட தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார்.


ஏற்கனவே இவர் திருமணம் செய்து விவகாரத்து பெற்ற நிலையில், சினிமாவில் பைனான்ஸ் உதவிகளை செய்து வந்த மது என்பவரை ரகசியமாக திருமணம் செய்தார். அதை தொடர்ந்து நடைபெற்ற வளைகாப்பு மிகவும் பிரமாண்டமாக நடந்தது.

தற்போது ஆர்.கே. சுரேஷ் மற்றும் மது தம்பதியனருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுதொடர்பான தகவலை ட்விட்டரில் வெளியிட்டுள்ள ஆர்.கே. சுரேஷ், தங்கள் குடும்பத்துக்கு கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார்.
 

From Around the web