79 வயதில் ஏழாவது குழந்தைக்கு தந்தையான பிரபல நடிகர்..!!
ஹாலிவுட் சினிமாவின் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவர் ராபர்ட் டி நீரோ. அவருக்கு தற்போது வயது 79. நடிப்புக்காக 2 முறை ஆஸ்கர் விருது வென்றுள்ள ராபர்ட் டி நீரோ, உலகளவிலும் கொண்டாடப்படும் நடிகராகவும் இருந்து வருகிறார்.
இவருடைய நடிப்பில் வெளியான ‘ஐரிஸ்மேன்’, ‘குட்ஃபெல்லாஸ்’, ‘காட்ஃபாதர் 2’, ‘ரேஜிங் புல்’ போன்ற படங்கள் குறிப்பிடத்தகுந்தவையாகும். தற்போது அவர் ‘கில்லர்ஸ் ஆஃப் தி ஃபிளவர் மூன்’, ‘அபவுட் மை ஃபாதர்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராபர் டி நீரோ, தனக்கு சமீபத்தில் ஏழாவது குழந்தை பிறந்துள்ளதாக கூறினார். தற்போது 79 வயதாகும் 7 மாத குழந்தை இருப்பது ஒட்டுமொத்த உலகத்தை ஆச்சரியமடையச் செய்துள்ளது.
எனினும் அந்த நேர்காணலில் குழந்தையின் தாய் பற்றியோ, குழந்தையின் பெயர் பற்றியோ அவர் எதுவும் கூறவில்லை. முன்னதாக ராபர்ட் டீ நீரோவுக்கு நடந்த திருமணங்கள் மற்றும் காதல் மூலமாக 6 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 - cini express.jpg)