இன்னும் தொடங்கவே இல்லை; அதற்குள் இப்படியா..!! பாவம் சஞ்சீவ்..!!

நடிகை ராதிகாவின் நிறுவனத்துடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, புதியதாக தயாராகி வந்த சீரியலில் இருந்து சஞ்சீவ் வெளியேறிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
sanjeev

தமிழில் ஒளிப்பரப்பான மெட்டி ஒலி, திருமதி செல்வம் போன்ற ஹிட் தொடர்களில் நடித்து, தனக்கான ஒரு அடையாளத்தை பதிவு செய்தவர் சஞ்சீவ். தற்போது ’2 கே கிட்ஸ்’ பலருக்கும் இவரை, நடிகர் விஜய்யின் நெங்கிய நண்பர் என்று சொன்னால் தான் தெரியும். இவருடைய பெயரில் பாதியை தான் விஜய் தனது மகன் ‘சஞ்சய்’க்கு சூட்டியுள்ளார்.

கடைசியாக பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்து, சீக்கரமாகவே வெளியேறிவிட்டார். அண்மைக் காலமாகவே சஞ்சீவ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தொடர்கள் என எதிலும் நடிக்காமல் இருந்தார். அப்போது தான் ராதிகா சரத்குமார் விஜய் தொலைக்காட்சிக்காக புதிய தொடரை தயாரிப்பதாக அறிவித்தார்.

அதில் சஞ்சீவ், ரேஷ்மா முரளிதரண், நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்,  ஆனந்த பாபு, சிந்து ஷ்யாம் போன்ற நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த சீரியலுக்கு பூஜையும் போடப்பட்டு, தயாரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் சஞ்சீவ் அந்த தொடரில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

வெறும் 10 நாட்கள் நடத்தப்பட்ட ஷூட்டிங்கில் மட்டுமே அவர் பங்கு கொண்டதாகவும், அதற்கு தயாரிப்பு நிர்வாகத்துடன் சஞ்சீவுக்கு பிரச்னை எழுந்ததாகவும், அதனால் அவர் தொடரிலிருந்து விலகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த தகவலை சஞ்சீவ் அல்லது தயாரிப்பாளர் ராதிகா தயாரிப்பில் இன்னும்  உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

From Around the web