நடிகர் சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ படத்தின் ட்ரெய்லர்..!!

 
1

தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட முன்னணி ஹீரோக்களின் நண்பனாக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் நடிகர் சந்தானம் .

உச்ச நட்சத்திரங்கள் முதல் வளர்ந்து வரும் நடிகர்களின் படங்கள் வரை அனைத்திலும் காமெடியியல் கலக்கிய சந்தானம் இன்று தமிழ் திரையுலகில் கலக்கல் நாயகனாக வலம் வருகிறார்.

இந்நிலையில் நடிகர் சந்தானத்தின் நடிப்பில் தற்போது புதிதாக உருவாகி வரும் படம் தான் ‘இங்கு நான்தான் கிங்கு’ .

ஆனந்த் நாராயண் இயக்கும் இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக பிரியாலயா என்ற புதுமுக நடிகை நடிக்கிறார். மேலும் இவர்களுடன் தம்பி ராமையா, மறைந்த நடிகர் மனோபாலா, முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பாலசரவணன், ’லொள்ளு சபா’ மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க கோபுரம் பிலிம்ஸ் இப்படத்தை மினிமம் பட்ஜெட்டில் தயாரித்துள்ளது .

இந்நிலையில் இப்படம் குறித்த அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்புத்தொல்லை செய்து வந்த நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்படம் முழுவதும் நகைச்சுவையாக நகரும் என்பதை இந்த ட்ரைலரின் காட்சிகள் உறுதி செய்கின்றன. டைமிங் வசனங்கள் படத்தின் வெற்றிக்கு நிச்சயம் கைகொடுக்கும் என்பது நன்றாக தெரியும் வண்ணம் உள்ளது .

From Around the web