உறுப்புகள் செயலிழந்தன- மோசமடையும் சரத்பாபு உடல்நிலை..!!

ஹைதராபாத்தில் சரத்பாபுவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கும் நிலையில், அவருடைய உறுப்புகள் தொடர்ந்து செயலிழந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
sarath babu

ஆந்திராவைச் சேர்ந்த நடிகர் சரத்பாபு, தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அவருக்கு 71 வயதாகிறது. அண்மையில் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார்.

மேலும் அவரது உடல்நிலை மோசமான நிலையில், கடந்த 20-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சரத்பாபு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வெண்டிலேட்டர் மற்றும் செயற்கை சுவாசம் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சரத்பாபுவின் சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல் போன்றவை செயலிழந்து வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவருடைய உடல்நிலை சகஜநிலைக்கு திரும்பினால் தான், முழுமையான தகவலை வழங்க முடியும் என்று கூறியுள்ளனர்.

ஆந்திராவைச் சேர்ந்த சரத்பாபு, கே.பாலசந்தர் இயக்கிய 'பட்டினப்பிரவேசம்' படம் தமிழில் நடிகராக அறிமுகமானார். ரஜினிகாந்துடன் அவர் நடித்த முள்ளும் மலரும், நெற்றிக்கண், அண்ணாமலை, முத்து, கமல்ஹாசனுடன் நடித்த சலங்கை ஒலி உள்ளிட்ட பல படங்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. 
 

From Around the web