கொலை மிரட்டல் விடுக்கும் நடிகர் சரவணன்- மனைவி பரபரப்பு புகார்..!!

தன்னுடைய நகைகளை வைத்து கட்டிய வீட்டில் இருந்து தன்னை வெளியேறும் படி கூறி கொலை மிரட்டல் விடுப்பதாக நடிகர் சரவணன் மீது அவருடைய மனைவி சூரியஸ்ரீ முதல்வர் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.
 
actor saravanan

தமிழ் சினிமாவில் 90-களில் ஹீரோவாக நடித்து பிரபலமானவர் சரவணன். நாளிடைவில் அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனதை அடுத்து, அவர் சினிமாவில் இருந்து காணாமல் போனார். இதையடுத்து 2012-ம் ஆண்டு வெளியான ‘பருத்திவீரன்’ படத்தில் மீண்டும் அவர் ரீ-எண்ட்ரி கொடுத்தார்.

அதையடுத்து சரவணன் தொடர்ந்து நிறைய படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். அதன்மூலம் அவருக்கு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் தொடர்ந்து பிஸியான நடிகராக மாறினார். 

இந்நிலையில் அவருக்கு சூரியஸ்ரீ என்கிற மனைவி இருக்கும் நிலையில், சரவணன் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக செய்திகள் வெளியாகின. இதனையடுத்து சூரியஸ்ரீ தற்போது முதல்வரின் தனிப்பிரிவில் கணவர் சரவணன் மீது புகார் மனு அளித்துள்ளார்.

அதில், பருத்திவீரன் படத்தில் முன்பு வரை சரவணன் பிச்சை எடுக்கிற நிலையில் தான் இருந்தார். நான் தான் அவருக்கு பாதுகாப்பான சூழலை கொடுத்து, உணவும் போட்டேன். தற்போது நான் சொந்த காசில் கட்டிய வீட்டிலிருந்து வெளியேறும்படி என்னை மிரட்டி வருகிறார். அதற்கு நான் மறுத்துவரும் நிலையில் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். என் உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால், அதற்கு அவர் தான் காரணம் என்று கூறியுள்ளார்.

மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஸ்ரீதேவி என்கிற பெண்ணுடன் சரவணனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரை திருமணம் செய்யாமல் பக்கத்து தெருவில் வேறு ஒரு வீட்டில் குடும்பம் நடத்தி வருகிறார். அடிக்கடி என் வீட்டுக்கு வந்து வீட்டை காலி செய்யும் படி எனக்கு தொந்தரவு கொடுக்கிறார். இரண்டு தினங்களுக்கு முன்பு அடியாட்களோடு என்னை வந்து மிரட்டினார் என்று சூரியஸ்ரீ தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சரவணன், எனக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு குழந்தை இல்லை என்பதால் கடந்த 2015-ம் ஆண்டு 2-வது திருமணம் செய்துகொண்டேன். இதனால் எனக்கும் முதல் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கொரோனா காலகட்டத்தில் தகராறு அதிகமானதால், நான் முதல் மனைவி வீட்டுக்கு செல்லவில்லை. 

அந்த நேரத்தை பயன்படுத்தி முகலிவாக்கம் பகுதியில் தனக்கு வீடு வாங்கிக் கொடுத்த புரோக்கர் ராமமூர்த்தி என் இடத்தில் ஒரு கடையை கட்டி வைத்துள்ளார். இதுகுறித்து கேட்டால் வெட்டுவேன் குத்துவேன் என்று அந்த நபர் சொல்கிறார். இதனால் ராமமூர்த்தி மற்றும் அவருமைய மனைவி ஜெயமணி ஆகியோர் மீது புகார் அளித்துள்ளேன். அந்த ஜெயமணி தான் என் முதல் மனைவியை தூண்டிவிட்டு என்னை பழிவாங்குகிறார் என்று சரவணன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தமிழ் திரையுலகில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

From Around the web