நடிகர் டூ விவசாயி - வயலில் விவசாயம் செய்யும் நடிகர் சசிகுமார்..! 

 
1

திரைத்துறையில் இயக்குநராக அறிமுகமான சசிகுமார், சுப்ரமணியபுரம் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு திரைப்படங்களை இயக்கி வந்தார். அதேவேளை, நடிப்பிலும் ஆர்வம் கொண்ட அவர், நாயகனாக நடித்தும் தனக்கென ரசிகர்களை பெற்றார். சசிக்குமார், சூரி நடிப்பில் வெளியான கருடன் திரைப்படம் கடந்த மே மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ரூ. 50 கோடி வரை வசூலித்தது. இவர் நடித்துள்ள ’ஃபீரீடம் ஆகஸ்ட் 14’ திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இயக்குநர் ராஜுமுருகன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், சசிக்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது வயலில் நடவு நடும் படங்களைப் பகிர்ந்துள்ளார். பெரும்பாலும் கிராமங்கள் மற்றும் மண் சார்ந்த கதைகளில் நடித்துள்ள சசிக்குமார், விவசாயம் தொடர்பான விஷயங்களில் பெரிதும் ஈடுபாடு கொண்டவராகவே தன்னை வெளிப்படுத்தி வந்துள்ளார்.

தற்போது தனது வயலில் நடவு நடும் பெண்களுடன் நின்று கொண்டிருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து ‘எங்க வயலில் நடவு’ என பதிவிட்டுள்ளார்.


 

From Around the web