பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் சதீஷ்..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. இதற்கான பார்வையாளர்கள் வட்டம் பெரியளவில் உள்ளது. மிகவும் பிரபலமான இந்த சீரியலில், ஆரம்பம் முதலே கோபி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சதீஷ்.
சீரியலின் நாயகனும் இவரே, வில்லனும் இவரே. மிகவும் நேர்த்தியான தனது நடிப்பால், அந்த தொடர் மூலம் மிகப்பெரிய ரசிகர் வட்டம் உருவானது. அதுவும் ராதிகாவை இரண்டாந்தாரமாக கோபி திருமணம் செய்துகொண்ட பிறகு, சதீஷின் நடிப்பு வேற லெவலுக்கு வந்துவிட்டது.
இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ வெளியிட்ட கோபி, பாக்கியலட்சுமி தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது ரசிகர்கள் பலரிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக தெரிய வருகிறது.
இதுதொடர்பாக நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ள வீடியோவில், இன்னும் 10 முதல் 15 எபிசோடுகளுக்கு தான் நான் வருவேன். அத்துடன் நான் சீரியலில் இருந்து விலகுகிறேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து பாக்கியலட்சுமி சீரியலில் கோபியாக யார் நடிக்க வாய்ப்புள்ளது என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடயே எழுந்துள்ளது.