நடிகர் சர்வானந்தின் திருமணம் நின்றுபோனதா? குடும்பத்தினர் செய்த அதிரடி..!!

நடிகர் சர்வானந்த் மற்றும் ரக்ஷிதா ரெட்டி திருமணம் நின்றுபோனதாக செய்திகள் வெளியான நிலையில், குடும்பத்தினர் எடுத்த அதிரடி முடிவு குறித்து தெலுங்கு ஊடகங்கள் பரபரப்பு செய்தியை வெளியிட்டுள்ளன.
 
sharwanand

ஆந்திராவைச் சேர்ந்த சர்வானந்த் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். இவர் எங்கேயும் எப்போதும் படம் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து நாளை நமதே, ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை, கணம் போன்ற படங்களில் நடித்தார்.

எனினும் தொடர்ந்து அவர் தெலுங்கு சினிமாவில் தான் பெரியளவில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் 39 வயதாகும் ஷர்வானந்துக்கும் அவருடைய நீண்ட நாள் காதலியான ரக்‌ஷிதா ரெட்டிக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயம் நடைபெற்றது.

ஆனால் அவர்களது திருமண தேதி குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. பல மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் ஷர்வானந்த் மற்றும் ரக்‌ஷிதா இருவரும் பிரிந்துவிட்டதாக தெலுங்கு ஊடகங்கள் பல செய்திகளை வெளியிட்டன.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஷர்வானந்த் பெற்றோர், உடனடியாக திருமண தேதி குறித்த அறிவித்துள்ளனர். அதன்படி இவர்களது திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரிலுள்ள லீலா பேலஸில் ஜூன் மாதம் 3-ம் தேதி நடக்கவுள்ளது. இதையடுத்து ஷர்வானந்த் மற்றும் ரக்‌ஷிதா ஜோடியின் திருமணம் நின்று போன வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
 

From Around the web