அடுத்த வாரம் திருமணமாகும் நிலையில், கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்..!!

இன்னும் சில நாட்களில் திருமணத்தை வைத்துக்கொண்டு பிரபல நடிகர் கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
sharwanand

தமிழில் நாளை நமதே, எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஷர்வானந்த். ஐ.டி. துறையில் பணியாற்றி வரும் ரக்‌ஷிதா ஷெட்டி என்பவருடன் ஷர்வானந்துக்கு அடுத்த வாரம் திருமணம் நடைபெறவிருந்தது. 

இவர்கள் இருவருடைய நிச்சயதார்த்தமும் கடந்தாண்டு நடந்துவிட்டது. ஆனால் கொரோனா காரணமாக தொடர்ந்து திருமணத்தை இருவரும் தள்ளிவைத்துக் கொண்டே வந்தனர். ஒரு கட்டத்தில் நடிகர் ஷர்வானந்த் திருமணம் நின்றுவிட்டதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

உடனடியாக அவசர அவசரமாக ஷர்வானந்த் மற்றும் ரக்‌ஷிதா ஷெட்டி திருமணத்தை அவர்களுடைய வீட்டார் உறுதி செய்தனர். அதன்படி வரும் ஜூன் 3-ம் தேதி இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் இருக்கும் லீலா பேலஸ் ஹோட்டலில் நடத்த திட்டமிடப்பட்டது. 

இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தியில் ஹைதராபாத்தில் நேற்று அதிகாலை 2 மணிக்கு பயணித்த ஷர்வானந்த் கார், பிலிம் நகர் பகுதியில் இருக்கும் சாலை தடுப்பில் மோதி பெரும் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதையடுத்து காயங்களுடன் மீட்கப்பட்ட ஷர்வானந்த், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவருக்கு பெரியளவில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. விரைவில் அவர் வீடு திரும்புவார் என தகவல்கள் கூறப்படுகின்றன.

From Around the web