நடிகர் சித்தார்த் பிரஸ் மீட்டிற்கு அத்துமீறி நுழைந்த கட்சி தொண்டர்கள்..!

 
1

‘சித்தா’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பை பெங்களூருவில் நடந்துது.

இந்நிலையில் கன்னட ஆதரவு குழு உறுப்பினர்கள் அதனை தடுத்து நிறுத்தினர். இந்த செய்தியாளர் சந்திப்பு பெங்களூருவில் நடைபெற்றது காவிரி நதி நீர் பற்றி பிரச்சனையால் இப்படி ஒரு சம்பவம் வந்தது..

கன்னட ரக்ஷண வேதிகே உறுப்பினர்கள் பெங்களூருவில் உள்ள எஸ்ஆர்வி திரையரங்கிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து,பத்திரிகையாளர் சந்திப்பை உடனடியாக நிறுத்துமாறு கோரினர், பத்திரிகையாளர் சந்திப்பு நடக்கும் நேரத்தில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பது அவசியம் என்று அவர்கள் சொல்லி கத்தினர்…​​காவிரி நதிநீர் பிரச்சனையை தீவிரமாக ஆதரிக்கவில்லை என்று விமர்சித்தார்கள்.

காவிரி நதிநீர் பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வரும் பிரச்சனையால் கர்நாடகா மற்றும் தமிழகம் இடையே அடிக்கடி பதற்றம் நிலவி வருகிறது. சமீப மாதங்களில் இரு மாநிலங்களும் தண்ணீர் பங்கீடு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறியதாக ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருவதால், பதற்றம் அதிகரித்துள்ளது.

சித்தார்த் தமிழ் பேசும் நடிகர் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழி படங்களிலும் பணியாற்றியுள்ளார்.அவர் சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளில் வெளிப்படையாக பேசுவதற்கு பெயர் பெற்றவர்..இப்போது இந்த பிரஸ் மீட்டில் நடந்தது வைரலாக பேசப்பட்டு வருகிறது.


 

From Around the web