கமலின் படத்துக்கான ஆளே மாறிப் போன சிம்பு..!! இதுதான் புது கெட்-அப்.!!

ரூ. 100 கோடி பட்ஜெட்டில் கமல்ஹாசன் தயாரிக்கும் படத்துக்காக புதிய தோற்றத்துக்கு மாறியுள்ளார் நடிகர் சிம்பு. அவருடைய புதிய கெட்-அப் புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளன.
 
kamal haasan

தற்போது தாய்லாந்தில் பல்வேறு உடற்பயிற்சிகளை கற்றுக்கொண்டு வரும் சிம்புவின் புகைப்படம் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி நடிக்கும் படத்திற்காக சிம்பு புதிய கெட்-அப்புக்கு மாறி வருவதாக கூறப்படுகிறது. 

’அச்சம் என்பது மடமையடா’, ‘நான் ராஜாவாகப் போகிறேன்’ போன்ற படங்களில் சிம்பு நடித்த போது, அவருடைய உடலமைப்பு பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது. அப்போது அவர் மாநாடு படத்தில் நடித்து வந்தார். இதையடுத்து உடலை குறைக்கும் முயற்சியில் இறங்கினார். கடுமையான உடற்பயிற்சியை தொடர்ந்து மன்மதன் பட தோற்றத்துக்கு மாறினார்.

kamal

 

அதனால் மாநாடு படத்தில் பாதி காட்சிகளில் பருமனாகவும், மீதமுள்ள காட்சிகளில் சற்று இளைத்தும் சிம்பு நடித்தார். பின்னர் அவர் பருமனாக தெரியும் காட்சிகள் கிராஃபிக்ஸ் கொண்டு மாற்றப்பட்டு, திரையரங்குகளில் வெளியிடப்பட்டன. இதையடுத்து அவர் நடிக்க ஒப்புக்கொண்ட படம் ‘பத்து தல’.

அந்த படத்தில் அவர் தாதாவாக நடிக்கிறார் என்பதால் சற்று பருமனான உடல் தேவைப்பட்டது. இதற்காக மீண்டும் அவர் உடலை பருமனாக்கிக் கொண்டார். ஆனால் அதையடுத்து அவரால் வேண்டியளவு குறைக்க முடியவில்லை. இதற்கான தாய்லாந்து சென்றுள்ள சிம்பு, அங்கு தங்கி மார்ஷியல் ஆர்ட்ஸ் போன்ற உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இதன்மூலம் நிலையான உடலமைப்பு கிடைக்கும் என்று நம்புகிறார்.

simbu

இதற்கிடையில் கமல்ஹாசன் தயாரிக்கும் தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக அறிவிக்கபப்ட்டது. இந்த படம் சுமார் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது. இதுவரை சிம்பு நடித்த படங்களில் ரூ. 100 கோடிக்கு தயாராகும் முதல் படம் இதுதான். இப்படத்துக்கான மீண்டும் தனது உடலமைப்பை மாற்றி வருகிறார் சிம்பு. 
இதற்காகவே அவர் முன்பே தாய்லாந்து சென்றுவிட்டதாக தகவல்கள் கூறப்படுகின்றன. 

இந்நிலையில் சிம்புவின் புதிய தோற்றம் தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில் அவர் மேலும் இளமையாக தெரிகிறார். அதுமட்டுமில்லாமல் கட்டு மஸ்தான உடலமைப்புடன் காணப்படுகிறார். இந்த புதிய கெட்-அப்பை பார்க்கும் போது மன்மதன் மற்றும் காளை படங்களில் பார்க்கப்பட்ட சிம்புவை போல உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. 

From Around the web