கொட்டுக்காளி படம் முதலீட்டை விட அதிக லாபம் வந்தால் இதை செய்வேன் - நடிகர் சிவகார்த்திகேயன்..! 

 
1

ஒருபக்கம், சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தாலும் அவ்வப்போது திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் திரையுலகில் மிகவும் நெருங்கிய நண்பர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூரி. படங்களில் வாடா போடா என அழைத்துக்கொண்டாலும் நிஜத்தில் அண்ணன் – தம்பியாக இருவரும் பழகி வருகிறார்கள். இந்நிலையில் தான் சூரி நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி திரைப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். இந்த படம் வருகிற 23ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த படத்தை வினோத் என்பவர் இயக்கியுள்ளார். ஏற்கனவே இப்படம் பல வெளிநாடுகளில் நடந்த திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டை பெற்றிருக்கிறது. கொட்டுக்காளி படத்தின் டிரெய்லர் வெளியானது.

இந்த விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் ‘கொட்டுக்காளி படம் ஹிட் அடித்து என் முதலீட்டை விட லாபம் வந்தால் அதை இயக்குனர் வினோத்துக்கு அடுத்த படத்திற்கான முன் பணமாக கொடுப்பேன். அதிகமான லாபம் வந்தால் வினோத் போன்ற 2 இயக்குனர்களுக்கு முன் பணமாக கொடுப்பேன். எனக்கு வாழ்க்கை கொடுத்த இந்த சினிமாவிற்கு என்னால் முடிந்த சிறு உதவி இது’ என அவர் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். 

From Around the web