ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன் - என்னாச்சு..??

தமிழ் சினிமாவில் தொடர்ந்து முக்கியமான படங்களில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் பதிவிட்டுள்ள தகவல், அவருடைய ரசிகர்கள் மற்றும் சமூகவலைதளவாசிகளை மிகவும் கவலை அடையச் செய்துள்ளது.
 
Sivakarthikeyan

சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக ரவிகுமார் இயக்கத்தில் தயாராகியுள்ள ‘அயலான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இவ்விரண்டு படங்களுமே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. 

முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘ப்ரின்ஸ்’ திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழில் படுதோல்வி அடைந்தது. இதனால் சமூகவலைதளங்களில் அவருக்கு எதிரான பரப்புரைகள் நிறைய உருவாகின. அவர் என்ன போஸ்ட் போட்டாலும் நிறைய கமெண்டுகள் எழுந்தன.


இந்நிலையில் சமூகவலைதளத்தில் இருந்து சிறிது காலம் விலகவுள்ளதாக சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், என் அன்பு சகோதர சகோதரிகளே, நான் ட்விட்டரில் இருந்து சில காலம் ஓய்வெடுக்க உள்ளேன். நான் விரைவில் திரும்பி வருவேன். என் படங்கள் குறித்த அட்பேட்டுகளை என் குழு இங்கு பதிவிடுவார்கள் என்று தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயனின் இந்த முடிவு ரசிகர்களை மிகவும் வருத்தமடையச் செய்துள்ளது.
 

From Around the web