விடுதலை படத்திற்காக சூரி வாங்கிய மொத்த சம்பளம் இவ்வளவுதானா..? 

 
விடுதலை படம்

விடுதலை படத்தின் இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து நடிகர் சூரி வாங்கியுள்ள மொத்த சம்பளம் தொடர்பான தகவல்கள் வெளியாகி கோலிவுட் சினிமாவில் பரபரப்பை கிளப்பியுள்ளன.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்து வரும் படம் விடுதலை. இளையராஜா இசையமைப்பில் உருவாகும் இந்த படம் 2 பாகங்களாக தயாராகியுள்ளது. விடுதலை படத்தின் முதல் பாகம் வரும் மார்ச் 31-ம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

சூரி மற்றும் விஜய் சேதுபதி

அண்மையில் சென்னையில் நடந்த விழாவில் விடுதலை முதல் பாகத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டன. படத்தின் டிரெய்லர் வெளியானதை அடுத்து, ‘விடுதலை-1’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு சினிமா ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. 

இந்த படம் மூலம் தமிழில் காமெடி நடிகராக வலம் வந்த சூரி, கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்நிலையில் மொத்தம் இரண்டு பாகங்களாக தயாராகும் விடுதலை படத்திற்காக சூரி வாங்கிய மொத்த சம்பள விபரங்கள் தெரியவந்துள்ளன.

சூரி, வெற்றிமாறன் மற்றும் விஜய் சேதுபதி

அதன்படி விடுதலை படம் ஆரம்பிக்கப்பட்ட போது, சூரிக்கு சம்பளமாக பேசப்பட்ட தொகை வெறும் ரூ. 30 லட்சம் தான். ஆனால் இந்த படம் 2 பாகங்களாக தயாரிக்க முடிவு செய்யப்பட்ட பிறகு, கூடுதலாக ரூ. 10 லட்சம் அதிகரித்து, சூரிக்கு மொத்தமாக ரூ. 40 லட்சம் சம்பளம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவல் கோலிவுட் வட்டாரத்தில் ஷாக்கை கிளப்பியுள்ளது. கடுமையான சூழலுக்கு மத்தியில் நடித்துள்ள ஒரு படத்துக்காக இவ்வளவு குறைவான சம்பளம் வாங்கும் முதல் கதாநாயகன் சூரி தான் என்று கூறப்படுகிறது. எனினும் அவர் அடுத்து நடிக்கும் ‘கொட்டுக்காளி’ படத்துக்கு ஒரு கோடி வரை சம்பளம் வழங்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

From Around the web