கலக்கல் நாயகன் நடிகர் சூரியின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

 
1

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக கால்பதித்து இன்று மிரட்டும் நாயகனாக தனது கடின உழைப்பால் உயர்ந்தவர் தான் நடிகர் சூரி . தனது நேர்த்தியான நடிப்பால் எண்ணற்ற குடும்ப ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள நடிகர் சூரியின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் கருடன்.

திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்தது.

அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து கதையின் நாயகனாக கலக்கி வரும் நடிகர் சூரி தொடர்ந்து நல்ல கதையம்சங்களைக் கொண்ட திரைக்கதையில் நடிப்பதில் அதீத ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்தவகையில் தற்போது நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க போகும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .

‘கருடன்’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ‘விலங்கு’ இணைய தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கும் படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்த புகைப்படங்களும் வெளியாகி வைரலாக வலம் வருகிறது.


 


 

From Around the web