உயிரழந்துவிட்டதாக வதந்தி- முற்றுப்புள்ளி வைத்த சுதாகர்..!!
 

சமூகவலைதளங்களில் தான் மரணம் அடைந்துவிட்டதாக கூறி வெளியாகும் தகவல்கள் எதுவும் உண்மை கிடையாது என்று தெலுங்கு நடிகர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
 
sudhakar

தமிழில்  பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘கிழக்கே போகும் ரயில்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சுதாகர். அதை தொடர்ந்து . ‘கல்லுக்குள் ஈரம்’, 'சுவரில்லாத சித்திரங்கள்', ‘நிறம் மாறாத பூக்கள்', 'மாந்தோப்பு கிளியே', 'எங்க ஊரு ராசாத்தி', 'பொண்ணு ஊருக்கு புதுசு', ‘அதிசயபிறவி’ போன்ற படங்களில் நடித்தார்.

அதை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடிக்கத் துவங்கிய அவர், அங்கு பிரபல நகைச்சுவை நடிகராக உருவெடுத்தார். இவர் மரணம் அடைந்துவிட்டதாகக் கூறி சமூகவலைதளங்களில் கடந்த 2 நாட்களாக செய்திகள் வெளியாகின. அதை சில தெலுங்கு ஊடகங்கள் உண்மை என்று நம்பி செய்தி வெளியிட்டுவிட்டன.


ஆனால் தான் உயிரிழக்கவில்லை, நலமுடன் இருப்பதாக கூறி சுதாகர் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் என்னை குறித்து வெளியாகும் செய்திகள் எதுவும் உண்மை கிடையாது. அப்படிப்பட்ட பொய்யான தகவல்களை மக்கள் யாரும் நம்ப வேண்டாம். தயவு செய்து பொய் செய்திகளை யாரும் பரப்பாதீர்கள். நான் ஆரோக்கியமுடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று சுதாகர் தெரிவித்துள்ளார்.

From Around the web