அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினாலும் கவலையில்லை: நடிகர் சுரேஷ் கோபி..!

 
1

கேரளத்தில் நடைபெற்ற கேரள திரைப்பட வர்த்தக சபை நடத்திய நிகழ்ச்சியில் நடிகரும் மத்திய அமைச்சர்யுமான சுரேஷ் கோபி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் சுரேஷ் கோபி பேசியதாவது:- நான் 20 முதல் 22 படங்களின் திரைக்கதையை கேட்டபிறகு, அவற்றில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இது குறித்து, திரைப்படங்களில் நடிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் அனுமதி கோரினேன். எத்தனை படங்கள்? என்று கேட்டார். நான் 22 என்று கூறினேன். அதைக் கேட்ட அமித் ஷா, எனது கோரிக்கை கடிதத்தை ஒதுக்கி வைத்தார். ஆனால், அதற்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் கூறினார்.

எப்படி இருந்தாலும் நான் செப்டம்பர் 6-ம் தேதி படப்பிடிப்பைத் தொடங்குவேன். என்னுடைய அமைச்சர் பதவியின் கடமைகளை நிறைவேற்ற, படப்பிடிப்பு இடங்களுக்கு, அமைச்சகத்திலிருந்து மூன்று அல்லது நான்கு அதிகாரிகளை என்னுடன் அழைத்து வருவேன். அதற்கேற்றவாறு, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். நான் படங்களில் நடிப்பதற்காக, என்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினாலும் கவலையில்லை. நான் காப்பாற்றப்பட்டதாகத் தான் கருதுவேன். அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும். அமைச்சர்யாக வேண்டும் என்ற விருப்பம் எனக்கு ஒருபோதும் இல்லை' என்று தெரிவித்தார்.

From Around the web