நடிகர் சூரி 5 படங்களில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம்..?

 
1

1999-ம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய சூரி, நினைவிருக்கும் வரை, சங்கமம் போன்ற திரைப்படங்களில் யாரும் கவனிக்கப்படாத கதாபாத்திரங்களில் நடித்து திரையுலகில் பணியாற்றியுள்ளார். இவர் திரைப்படங்களில் மட்டும் இல்லாமல் திருமதி செல்வம், புசுபாஞ்சாலி, மைதிலி போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

soori

2009-ம் ஆண்டு வென்னிலா கபடி குழு திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரத்திரமானது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து களவாணி, தூங்கா நகரம், குள்ளநரி கூட்டம் போன்ற திரைப்படங்களில் நடித்து வந்துள்ள இவர், முன்னணி நகைச்சுவை நடிகராக சித்தரிக்கப்பட்டார். இவருக்கு 2019-ம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கி இந்திய அரசு பெருமைப்படுத்தியுள்ளது.

இந்ந நிலையில், சூரியை தனது விடுதலை படத்தில் கதையின் நாயகனாக நடிக்க வைத்தார் இயக்குநர் வெற்றிமாறன். அந்தப் படம் சூரிக்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்திக்  கொடுத்திருக்கிறது. அதனால் தற்போது அவரை அடுத்தடுத்து பல இயக்குநர்கள் ஹீரோவாக நடிக்க வைப்பதற்கு ஒப்பந்தம்  செய்து இருக்கிறார்கள். 

Soori

அந்த வகையில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வினோத் ராஜ் இயக்கும் கொட்டு காளி மற்றும் ஏழு கடல் ஏழுமலை போன்ற படங்களில் நடிப்பவர், அதையடுத்து  விக்ரம் சுகுமாரன், துரை செந்தில்குமார் ஆகியோர் இயக்கும்  படங்களிலும் கமிட் ஆகி இருக்கிறார். இது தவிர மற்றொரு படத்தில் அவர் நாயகனாக நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. 

அந்த வகையில் தற்போதைய நிலவரப்படி ஐந்து படங்களில் ஹீரோவாக நடித்து  வரும் சூரியை  தேடி மேலும் சில இயக்குநர்களும் கதை சொல்லி வருகிறார்கள். அதனால் சூரி தற்போது பிஸியான ஹீரோவாகி விட்டார்.

From Around the web