அரசியலில் இறங்க நடிகர் சூர்யா திட்டம் ?

 
1

சூர்யா நற்பணி இயக்கம் 60 மாவட்டங்களாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. 60 மாவட்டங்களிலும் வார்டு வாரியாக நிர்வாகிகளை நியமிப்பது மற்றும் எதிர்கால திட்டமிடலை முன்வைத்து இயக்கத்தை வலுப்படுத்துவதற்காக தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறது சூர்யா நற்பணி இயக்கத் தலைமை.

அந்த வகையில் விழுப்புரம், கடலூர் கிழக்கு, கடலூர் தெற்கு, கடலூர் மேற்கு, புதுச்சேரி, மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. இதில் ஒன்றியம், நகரம், பேரூராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

From Around the web