நடிகர் மாரிமுத்து குறித்து நடிகர் சூர்யாவின் உருக்கமான பதிவு..!

 
1

பிரபல இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து திடீர் மாரடைப்பால் காலமானார். 57 வயதான இவர், கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கியவர். சமீபத்தில் ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தவர். சன்டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, பலரின் ஆதரவை பெற்றவர்.

இந்நிலையில் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த நடிகர் சூர்யா, நேருக்கு நேர் படத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த உதவி இயக்குநர்கள் ஒருவர் மாரிமுத்து என நடிகர் சூர்யா தெரிவித்தார். மேலும் “மிக அருமையாக பேசக் கூடியவர். எப்போதும் அவரை சுற்றியுள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வார். அவரை மிகவும் மிஸ் செய்வேன். அவர் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்” என்று சூர்யா குறிப்பிட்டுள்ளார்.

அவருடைய இழப்பு, அவருடைய குடும்பத்தாருக்கு மட்டுமின்றி, திரையுலக ரசிகர்களுக்கும் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

From Around the web