நடிகர் சூர்யாவிற்கு படப்பிடிப்பு தளத்தில் விபத்து..!
ஊட்டியில் "சூர்யா 44" படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வேலைகள் நடைபெற்று வந்த நிலையில் யாரும் எதிர்பாராவிதமாக படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது.சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் எற்பட்ட சிறு விபத்தினால் சூர்யாவின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக படப்பிடிப்பு வேலைகள் நிறுத்தப்பட்டு சூர்யா மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். சிகிச்சை நிறைவுடன் வைத்தியர்களால் சில நாட்கள் ஓய்விற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளார் நடிகர் சூர்யா.கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வேலைகள் அந்தமானில் நடைபெற்று முடிந்திருந்தது.
"சூர்யா 44" மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் இவ் விபத்து படத்தின் வெளியீட்டில் தாமதத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.எதுவான போதும் சூர்யாவின் நலனில் அக்கறையாய் உள்ளனர் அவரது தீவிர ரசிகர்கள்.