நடிகர் வடிவேலுவுக்கு தொற்று உறுதி!! ஒமைக்ரான் பாதிப்பா?

 
1

சமீபத்தில் டைரக்டர் ஷங்கர் வடிவேலுவுக்கு இடையே சமரசம் ஏற்பட்ட நிலையில் ரெக்கார்டு நீக்கப்பட்டது. இதையடுத்து சுராஜ் இயக்கத்தில் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற படத்தில் வடிவேலு நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் அந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இதில் வடிவேலுவுடன் ரெடின் கிங்ஸ்லி, சிவாங்கி உள்ளிட்டோர் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் படத்தின் சில முக்கியக் காட்சிகளையும், ஒரு பாடலையும் படமாக்க ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படக்குழு லண்டன் சென்றது.

இந்நிலையில், நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பேரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதற்கட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று மரபணு மாற்றம் அடைந்துள்ளது தெரியவந்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து நேற்று தான் நடிகர் வடிவேலு சென்னை திரும்பிய நிலையில் தொற்று உறுதியாகி உள்ளது.

From Around the web