நடிகர் வடிவேலு நல்ல மனிதர் - சர்டிபிகேட் கொடுக்கும் நடிகை பிரியங்கா..! 

 
1

மருதமலை படத்தில், அர்ஜூன் ஹீரோவாக நடித்திருப்பார் நடிகை பிரியங்கா. இந்த படத்தில் ஒரு காட்சியில், ஒரு பெண் திருமணம் செய்துக்கொள்ள ஸ்டேஷனுக்குள் ஒருவரோடு மாலையும் கழுத்துமாக வருவார். அப்போது அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க வடிவேலு முயற்சிக்கும் போது மாட்டு ரவி, சாரை பாம்பு என 4 பேர் அந்த பெண்ணின் கணவர் என்று வருவார்கள்.இந்த காட்சியில் நடித்தவர்தான் நடிகை பிரியங்கா. பல படங்களில் வடிவேலுவுடன் பிரியங்கா நடித்திருக்கிறார். 

சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி நடிகரான அறிமுகமான வடிவேலு, பெரிய நடிகராக வளர்ந்த பின், தன்னுடைய வளர்ச்சிக்கு காரணமானவர்களையே அலட்சியப்படுத்த ஆரம்பித்தார்.

பலரை, பொது இடங்களில் காரசாரமாக விமர்சித்தார். விஜயகாந்த், ராஜ்கிரண் போன்றவர்களை கண்டாலே முகம் சுளித்தார். இயக்குநர் ஷங்கரிடம் தகராறு செய்தார். அவர்தான் காதலன் போன்ற படங்களில் வடிவேலுவுக்கு நடிக்க வாய்ப்பளித்தவர்.இதனால் சினிமாவை விட்டே 10 ஆண்டுகளுக்கு மேலாக நிராகரிக்கப்பட்ட வடிவேலு, மீண்டும் நடிக்க வந்து அப்படியே சில படங்களில் நடிக்கவும் செய்கிறார். ஆனால் முன்பிருந்த இமேஜ், வரவேற்பு இப்போது ரசிகர்களிடம் வடிவேலுவுக்கு இல்லை என்பதே உண்மை.

அவருடன் காமெடி காட்சிகளில் நடித்த துணை நடிகர்கள் பலரும், வடிவேலு தங்களுக்கு செய்த அநியாயங்களை பட்டியலிட்டு கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஒரு நேர்காணலில் நடிகை பிரியங்கா கூறியதாவது, நடிகர் வடிவேலு நடிப்பு வராத பலருக்கும் தன்னுடன் காமெடி காட்சிகளில் நடிக்க வைத்து வாய்ப்பு வாங்கி கொடுத்தவர். அவரால்தான் நான் ஒரு நடிகையாக மக்கள் மத்தியில் பிரபலமானேன்.வடிவேலுவை பற்றி கண்டபடி பேசி அவரது உண்மையான முகத்தைஉடைத்து வருகின்றனர். ஒரு சிலரோ, நான் வாய் திறந்தா வடிவேலுவோட கொஞ்ச நஞ்ச மானம் மரியாதையும் போயிடும் என்று பேசி வருகின்றனர்.

ஆனால் நான் வடிவேலுவால் நல்ல நிலைமைக்கு வந்தேன். அவரால்தான் எனக்கு இந்த பெயரும் புகழும் கிடைத்தது என பிரியங்கா அந்த நேர்காணலில் பேசியிருப்பது, சினிமா ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகி, குடும்ப வாழ்க்கையில் இருந்த பிரியங்கா, இப்போது கணவரை விவாகரத்து செய்ய இருப்பதாகவும், அம்மாவுக்கு மருத்துவ சிகிச்சையளிக்க வேண்டியிருப்பதால், மீண்டும் சினிமாவில் நடிக்க வந்திருப்பதாகவும் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.நான் வாயை தொறந்தா வடிவேலுவின் மிச்ச மானமும் போயிடும் என்று சாட்டை சுழற்றிய சீரியல் நடிகைகளுக்கு மத்தியில் பிரியங்கா மட்டுமே, வடிவேலு நல்ல மனிதர் என்று சான்றிதழ் கொடுத்திருக்கிறார்.

From Around the web