வந்த கையுடன் விவேக் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய நடிகர் விஜய்..!

 
வந்த கையுடன் விவேக் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய நடிகர் விஜய்..!

படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ள நடிகர் விஜய் மறைந்த நடிகர் விவேக் வீட்டுக்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் கொடிகட்டிப் பிறந்த நடிகர் விவேக் கடந்த 16-ம் தேதி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையின் உயிரிழந்தார். நடிகர் விவேக்கின் திடீர் மறைவு திரைத்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை பெரிதும் பாதித்தது.

அதை தொடர்ந்து அவருடைய வீட்டுக்கு எடுத்து வரப்பட்ட விவேக்கின் உடலுக்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர், ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் இருவரும் விவேக்கின் இறுதிச் சடங்கில் பங்கேற்கவில்லை.

நடிகர் விஜய் தளபதி 65 படப்பிடிப்புக்காக ஜார்ஜியா நாட்டில் இருந்தார். அதனால் அவரால் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று சென்னை திரும்பிய நடிகர் விஜய், இன்று விவேக் வீட்டுக்கு சென்று குடும்பத்தினரை நேரில் சந்தித்து துக்கம் விசாரித்தார்.

இதுகுறித்த தகவலை நடிகர் விஜய்யின் பி.ஆர்.ஓ ரியாஸ் அகமது உறுதி செய்துள்ளார். ஆனால் சென்னையில் இருக்கும் நடிகர் அஜித் இதுவரை விவேக் குடும்பத்தாரை சந்திக்கவில்லை. விரைவில் அவர் சந்தித்து ஆறுதல் கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

From Around the web