மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழாவில் பேச்சில் மாஸ் காட்டிய விஜய்..!!

தேர்தலில் வாக்களிப்பதற்கு காசு வாங்க வேண்டாம் என்பதை பிள்ளைகள் பெற்றோர்களிடம் சொல்ல வேண்டும் என்று நடிகர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
 
vijay

தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக 10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் 3 இடங்கள் பிடித்த மாணவர்களை   சந்தித்தார் விஜய். ”மாணவர்களுக்கான விஜய் கல்வி விருது” என்கிற பெயரில் நடந்த நிகழ்வில் சுமார் 1400 மாணவர்கள் பங்கேற்றனர். சாதனை படைத்த மாணவ மற்றும் மாணவியருக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி நடிகர் விஜய் கவுரவித்தார். 

அதை தொடர்ந்து நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய விஜய், “காடு, பணம் இருந்தால் மற்றவர்கள் எடுத்துக்கொள்வார்கள். ஆனால் உங்களிடம் இருக்கும் கல்வியை யாராலும் தொட முடியாது” என்று அசுரன் படத்தின் தனுஷ் பேசிய வசனத்தை மேடையில் விஜய் பேசினார். தொடர்ந்து பேசிய அவர், வாழ்க்கையில் இலவசமாக கிடைப்பது அறிவுரை தான். அது உங்களுக்கு பிடிக்காது என்று தெரியும். ஆனால் அது இல்லாமல் இங்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. 

vijay

இது தகவல்கள் நிறைந்த உலகம். அதனால் உண்மை எது? பொய் எது? சரி எது? தவறு எது? எதை நம்புவது? எதை நம்பக்கூடாது? என்பதை சரியாக பிரித்து உணர நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு நீங்கள் பாட புத்தகத்தை தாண்டி சமூகத்தை புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும். கல்வியுடன் ஒழுக்கம், நற்சிந்தனை மிகவும் முக்கியம். எல்லா தலைவர்களை பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள். அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்றவர்கள் குறித்து படித்து தெரிந்துகொள்ளுங்கள். 

இந்த நாட்டின் நாளை வாக்காளர்கள் எல்லாம் இன்றைய மாணவர்கள் தான். நீங்கள் புதிய மற்றும் நல்ல தலைவர்களை தேர்வு செய்யவுள்ளீர்கள். ஆனால் இன்று நம் விரல்களை வைத்து நாமே கண்ணைக் குத்திக் கொள்வது தான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. உங்கள் பெற்றோர்களிடம், காசு வாங்கிவிட்டு வாக்களிக்க வேண்டும் என்பதை சொல்லுங்கள். நீங்கள் வலியுறுத்தினால் உங்களுடைய பெற்றோர்கள் நிச்சயம் கேட்பார்கள். 

vijay

எந்த சூழ்நிலையிலும் தவறான முடிவை எடுக்காமல் முன்னோக்கிச் செல்ல கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் என்ன செய்ய எண்ணுகிறீர்களோ, அதை மன உறுதியுடன் செய்ய முனைப்பு காட்டுங்கள். உங்களை மட்டம் தட்ட சில கூட்டம் இருக்கும். ஆனால் அதை கண்டுகொள்ள வேண்டும். உங்களை நம்பி நீங்கள் செயல்படுங்கள், எல்லோருக்கும் நன்றி. வணக்கம் 

என்று இந்நிகழ்வில் விஜய் பேசினார். அவருடைய பேச்சு சமூகவலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. 

From Around the web