லியோ படப்பிடிப்புக்கு கும்பிடு போட்ட விஜய்- உடனே பதிவுபோட்ட லோகேஷ்..!!

லியோ படத்தில் விஜய் தொடர்பான அனைத்து போர்ஷன்களும் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டதாக தகவல் வெளியான நிலையில், அதை லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் உறுதி செய்துள்ளார்.
 
leo movie

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் லியோ. இதில் அர்ஜுன், த்ரிஷா, சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த், கவுதம் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

மேலும் விக்ரம் படத்தில் இருந்து நரேன், பகத் பாசில் கதாபாத்திரங்களும் படத்தில் இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படக்குழு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


அதன்படி லியோ படத்தில் நடிகர் விஜய் தன்னுடைய அனைத்து காட்சிகளையும் நிறைவு செய்துவிட்டார். இதை உறுதி செய்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டரில் இரண்டாவது பயணத்தை மீண்டும் சிறப்பானதாக மாற்றியதற்கு நன்றி அண்ணா என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

From Around the web