பீச் ரிசார்ட்டில் நாளை நடிகர் விஜய்குமார் பேத்தியின் திருமணம்..!

 
1

சென்னை அருகே உள்ள பீச் ரிசார்ட்டில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஓப்பன் இடத்தில் அலங்காரம் செய்யப்பட்டு திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 

நடிகர் விஜயகுமாரின் பேத்தி, அனிதா விஜயகுமாரின் மகள் தியா மற்றும் திலான் திருமண நிச்சயதார்த்தம் கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்த நிலையில் நாளை திருமணம் நடைபெற உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல திரையுலக பிரபலங்களுக்கும், ஒரு சில அரசியல் பிரபலங்களுக்கும் விஜயகாந்த் திருமண அழைப்பிதழை கொடுத்த நிலையில் பல விவிஐபிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் மணமகள் தியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பந்தக்கால் மற்றும் சுமங்கலி பூஜை நடைபெறும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இந்த கியூட் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த வீடியோவில் மணமகன் திலானை வெட்கத்துடன் தியா கட்டிப் பிடித்து இருக்கும் காட்சிகளும், அண்ணன் அருண்விஜய்யை பார்த்து பாசத்துடன் தியா கட்டிப்பிடித்த காட்சிகளும் உள்ளதை ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் பார்த்து வருகிறார்கள். 


 

இந்த சுமங்கலி பூஜை விழாவில் விஜயகுமாரின் உறவினர்கள் அனைவரும் வருகை தந்திருக்கும் நிலையில் வனிதா விஜயகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டும் மிஸ்ஸிங் என்பது தெரியவந்துள்ளது.

From Around the web