திடீரென அம்மாவை சந்தித்த விஜய்- காரணம் இதுதான்..!!

நடிகர் விஜய் தனது தாய் மற்றும் தந்தையை விட்டு விலகிவிட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவர் தனது அம்மா ஷோபா சந்திரசேகருடன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
 
vijay and his mother

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக இருக்கும் விஜய், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கான ஷூட்டிங் சென்னை மற்றும் ஹைதாபாத்தில் மாறி மாறி நடந்து வருகிறது. 

நடிகர் விஜய்யின் நெருங்கிய உறவினராஜ செவன் ஸ்க்ரீன் ஜான் பிரிட்டோ தயாரிக்கும் இந்த படத்தில், அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், தனது பெற்றோரின் 50-ம் ஆண்டு திருமணநாளை முன்னிட்டு தனது அம்மா ஷோபா சந்திரசேகரை சந்தித்துள்ளார் விஜய். லியோ பட கெட்-அப்பில் அவர் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

கடந்து சில ஆண்டுகளாகவே விஜய் தனது பெற்றோரை தவிர்த்து வந்தத்தாக கூறப்பட்டது. குறிப்பாக அவர் தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரை விட்டு விலகிவிட்டதாக வதந்திகள் வெளியாகின. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த புகைப்படம் தற்போது வெளிவந்துள்ளது.
 

From Around the web