சொந்தமாக தியேட்டர் திறந்த நடிகர் விஜய்..!!

 
1

நடிகர், நடிகைகள் படங்களில் நடிப்பதோடு சொந்தமாகவும் தொழில் செய்கிறார்கள். ரியல் எஸ்டேட்டில் பல நடிகர்கள் முதலீடு செய்துள்ளனர். நட்சத்திர ஓட்டல், உணவகங்கள் நடத்துகிறார்கள். நகை வியாபாரம் செய்கின்றனர். உடற்பயிற்சி கூடங்கள் அமைத்துள்ளனர்.

இந்த வரிசையில் தற்போது நடிகர் விஜய் தேவரகொண்டாவும் தியேட்டர் தொழிலுக்கு வந்துள்ளார். இவர் தமிழில் நோட்டா படத்தில் நடித்து பிரபலமானார். தெலுங்கில் நடித்த அர்ஜுன் ரெட்டி படம் பெரிய வெற்றி பெற்று விஜய் தேவரகொண்டாவை முன்னணி கதாநாயகனாக உயர்த்தியது.

இவர் நடித்த டியர் காம்ரேட் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியானது. குறுகிய காலத்திலேயே முன்னணி கதாநாயகனாக உயர்ந்த விஜய் தேவரகொண்டா சம்பளத்தையும் உயர்த்தி இருக்கிறார்.

இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா ஐதராபாத்தில் உள்ள மகபூப் நகரில் சொந்தமாக புதிய தியேட்டர் கட்டி உள்ளார். பல கோடிகள் செலவு செய்து அனைத்து வசதிகளுடன் இந்த தியேட்டரை உருவாக்கி உள்ளார். புதிய தியேட்டரில் முதல் படமாக லவ் ஸ்டோரி என்ற தெலுங்கு படம் திரையிடப்படுகிறது. இந்த படத்தில் நாக சைதன்யா, சாய்பல்லவி ஜோடியாக நடித்துள்ளனர்.

From Around the web