விஜயகாந்தின் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி..!!

 
1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்த கேப்டன் விஜயகாந்த், தேமுதிக தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து அரசியல் வாழ்விலும் மிடுக்கான நடைபோட்டு வந்தார் .

சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் கொடிகட்டி பறந்த கேப்டன் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாவே உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசியல் வாழ்விலிருந்து விலகி தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சமீபகாலமாக உடல்நிலை மிகவும் மோசமாகவே தொடர் சிகிச்சையில் இருந்து வந்த விஜயகாந்த் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

கேப்டன் விஜயகாந்தின் மறைவு செய்தி திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ள நிலையில் அவரது உடலுக்கு ரசிகர்கள் அரசியல் தலைவர்கள் திரையுலகினர் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர் .

அந்தவகையில் நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளார் .

ஏற்கனவே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் அர்ஜுன் சத்யராஜ் மன்சூர் அலிகான் கவுண்டமணி உள்பட பல திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தியுள்ள நிலையில் தற்போது நடிகர் விஜயும் நேரில் சென்று விஜயகாந்தின் உடலுக்கு செலுத்தி அவரது குடும்பத்திற்கு ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.

From Around the web