நடிகர் விஜய் மகன் இயக்கும் படம்- ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!!
தமிழில் உச்சபட்ச நடிகராக இருக்கும் விஜய், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இதற்கான ஷூட்டிங் பணிகள் காஷ்மீரில் நடத்தி முடிக்கப்பட்டது. விரைவில் சென்னையில் மீதமுள்ள காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.
இதற்கிடையில் நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தனது அடுத்த குறும்படத்துக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே இவர் சில குறும்படங்களை இயக்கியுள்ளார். ஆனால் அவை சஞ்சயின் கல்வி சார்ந்த தேவைக்காக உருவாக்கப்பட்டன.
தற்போது அவர் தொழில்முறையான குறும்படத்தை இயக்க தயாராகி வருகிறார். சஞ்சய் தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த படத்தை இயக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த குறும்படத்துக்கான முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு ’புல் தி ட்ரிகர்’ என்று தலைப்பிட்டுள்ளனர். முழுக்க ஆங்கிலத்தில் தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றன. இந்த குறும் படத்தின் படப்பிடிப்பின் பொது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.