விபத்தில் சிக்கினார் நடிகர் விஜய் விஷ்வா..!! ஷூட்டிங் ஸ்பாட்டில் வலது கை முறிந்த சோகம்!!
அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் அபி சரவணன் என்கிற விஜய் விஷ்வா. அதன்பின் குட்டி புலி படத்தில் சிறிய துணை வேடங்களில் நடித்தார். அதனைத் தொடர்ந்து, 2014-ல் வெளியான ‘கேரளா நாட்டிலம் பெண்களுடனே’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் அறியப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, டூரிங் டாக்கீஸ், சாகசம், பட்டதாரி, பிகில், மாயாநிதி, கொம்பு வச்ச சிங்கம், சாயம் போன்ற படங்களில் ஹீரோவாகவும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். தற்போது தனது பெயரை விஜய் விஷ்வா என மாற்றிக்கொண்டு திரைப்டங்களில் நடித்துவருகிறார்.
தற்போது நடிகர் விஜய் விஷ்வா நடிக்கும் திரைப்படத்தின் காட்சிகள் ஏற்காடு பகுதியில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் படப்பிடிப்பின் போது இருசக்கர வாகனத்தின் மீது ஏறி குதிப்பது போன்ற காட்சிகள் படமாக்கபட்டது.
அப்போது பைக்கில் இருந்து குதிக்கும் போது கீழே விழுந்ததில் நடிகர் அபி சரவணனின் வலது கை முறிந்தது. இதனை அடுத்து வலியால் துடித்த அவர் சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.