நடிகர் விஜய் அரசியல் வருகை : பிரபல நடிகை விமர்சனம் ..!
இந்த நிலையில், நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். தனது கட்சியின் பெயரை டெல்லி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். தனது 69வது படத்திற்கு பிறகு முழுநேர அரசியலில் இணையவுள்ள தளபதி விஜய்க்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு அளித்து வருகின்றனர். குறிப்பாக பாஜகவின் அண்ணாமலை, திமுகவின் உதயநிதி ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தனியார் நிறுவனத்திற்கு பேட்டி அளித்த நடிகை கஸ்தூரி, தளபதி விஜய்யின் அரசியல் வருகை எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும், காவி கொள்கை கொண்டவர்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்றும், ஜோசப் விஜய்க்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார். அதேபோல் சிறுபான்மை மக்கள் திமுகவுக்கு வாக்களிப்பார்கள் என்று சில விஷயங்களைப் பேசினார்.
விஜய்யை ஜோஸப் என குறிப்பிடும் கட்சியினர் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற அரசியல் உண்மையை சொல்லியிருக்கேன். என் சொந்த கருத்தை அல்ல. திமுக கூட்டணிக்கு பாதிப்புன்னு சொன்ன உடனே உ.பி கழிசடைங்க எப்படியெல்லாம் மூட்டி விடுதுங்க பாரேன். பொய்யை மட்டும் தான் பேசுவீங்களாடா? @actorvijay https://t.co/PU5JzxokBi
— Kasturi (@KasthuriShankar) February 5, 2024

ஜோசப் விஜய் குறித்து அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவரது கருத்துக்கு ட்விட்டர் பயனர் ஒருவர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளித்துப் பேசிய கஸ்தூரி, விஜய்யை ஜோஸப் என குறிப்பிடும் கட்சியினர் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற அரசியல் உண்மையை சொல்லியிருக்கேன். என் சொந்த கருத்தை அல்ல. திமுக கூட்டணிக்கு பாதிப்புன்னு சொன்ன உடனே உ.பி கழிசடைங்க எப்படியெல்லாம் மூட்டி விடுதுங்க பாரேன். பொய்யை மட்டும் தான் பேசுவீங்களாடா? என பதிவிட்டுள்ளார்.