நடிகர் விக்ரமின் வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட அனுமதி..!

 
1

S.U.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் ’வீர தீர சூரன்’. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் இரண்டாம் பாகம் முதலில் வெளியாகவுள்ளது. அதற்கு பிறகே முதல் பாகம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

சமீபத்தில் படத்தின் டிரெய்லரும் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் களத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் மார்ச் 27ஆம் தேதியான இன்று திரையரங்கில் வெளியாக இருந்த நிலையில் பட வெளியீட்டிற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு 'வீர தீர சூரன்' திரைப்படத்தின் காலை 9 மணி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கியிருந்த நிலையில் அந்த காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருந்த விக்ரம் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்தியாவில் மட்டுமில்லாமால் வெளி நாடுகளிலும் படத்தின் முதல் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட குறுஞ்செய்திகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ஏமாற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 

இதனிடையே, இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கு பிறகு செட்டில்மெண்ட் முடிவுக்கு வந்துள்ளதாகவும், ரூ. 2.5 கோடி ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படவுள்ளதாகவும் தயாரிப்பாளர் ஷிபு இன்று பிற்பகல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராஜி தெரிவித்தார். இதை ஏற்றுகொண்ட தில்லி உயர் நீதிமன்றம், இருதரப்பும் எழுத்துப்பூர்வ பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும், எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தை 5 மணிக்குள் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. வீர தீர சூரன் திரைப்படத்தின் அனைத்து பிரச்னைகளும் இன்று(மார்ச் 27) மாலைக்குள் தீர்க்கப்பட்டு, 6 மணிக் காட்சி வெளியிடப்படும் என்று தகவல் தெரியவந்துள்ளது.

From Around the web