மீண்டும் இந்த வெற்றி கூட்டணியுடன் இணையும் நடிகர் விஷால்..!! 

 
1

‘எனிமி’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஷால் தற்போது ‘வீரமே வாகை சூடும்’ மற்றும் ‘லத்தி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும், துப்பறிவாளன் படத்தின் 2-ம் பாகத்தை இயக்கி நடிக்கப்போவதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் விஷால் நடிக்கும் 33-வது திரைப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருப்பதாகவும் எனிமி படத்தை தயாரித்த வினோத்குமார் இந்தப் படத்தையும் தயாரிக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்தப் படம் பெரும் பொருட்செலவில் பான் இந்தியன் திரைப்படமாக வெளியாக இருப்பதாக நடிகர் விஷால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். அதன்பின்பு நடிகர் சிம்புவை வைத்து ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தை இயக்கினார். தற்போது பிரபுதேவா நடிப்பில் ‘பஹீரா’ படத்தை இயக்கியுள்ளார். பஹீரா திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.


 


மீண்டும் இந்த வெற்றி கூட்டணியுடன் இணையும் நடிகர் விஷால் 

From Around the web